பொதுப்பேரவை 2024–25-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மான எண்:15 அடிப்படையில், வங்கியின் உறுப்பினர்களில் பங்குத்தொகை ரூ.100/-க்கு குறைவாக கொண்டுள்ள உறுப்பினர்கர், தகுதியற்ற உறுப்பினர்களாகக் கருதி அவர்களை உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தகுதியற்ற உறுப்பினர்களின் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இப்பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள், தங்களது உறுப்பினர் தகுதியைத் தொடர்வதற்காக 27.08.2026 அன்று அல்லது அதற்கு முன்னர், வங்கிக்கு நேரில் வந்து, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச பங்குத்தொகையைச் செலுத்தி, தேவையான KYC விவரங்களையும் சமர்ப்பித்து, வங்கியின் தகுதியான உறுப்பினராகத் தங்களது உறுப்பினர் நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், பொதுப்பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.